இலங்கை
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிப்பு
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலானது இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் வயிற்றோட்டம் தொடர்பான நோயாளர்கள் அதிகம் பதிவாகி வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.