24 6623381d5e2fc
இலங்கைசெய்திகள்

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

Share

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

நியூசிலாந்தின் வெலிங்டனில் (New Zealand Wellington) இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து, அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் (Pradeepa Saram) தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

குறித்த விஜயமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பிற நிறுவனங்களுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

நியூசிலாந்தில் கணிசமான அளவில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க இலங்கை வெளிநாட்டவர் சமூகம் உள்ளமையால் உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும் இது சாதகமாக அமையவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து 2021இல் இலங்கையில் ஒரு உயர்ஸ்தானிகராலயத்தை திறந்துள்ளதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் காணப்படுகின்றது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...