24 6621efe34b5c3
இலங்கைசெய்திகள்

தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு

Share

தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு

தொடருந்துப் பெட்டிகள் இன்மையால் 4 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என தொடருந்துத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவைகளும் இரத்தாகியுள்ளன.

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் இரத்தாகியுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...