images 10
சினிமாபொழுதுபோக்கு

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை

Share

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 27 ஆம் முதல் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டீமுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் அவரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தி நடத்திக் காட்ட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் குக்குகளாக நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், இர்பான், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் ஆச்சரியப்படும் வகையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகம் சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திலும் பாண்டியன் ஜோடியாக நடிக்க சுஜிதாவை விஜய் டிவி அணுகியதாகவும், ஆனால் மூன்று வளர்ந்த பையன்களுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று சுஜிதா கூறியதாகவும் செய்திகள் வெளியானது. சம்பளம் அதிகம் தருகிறோம் என்று விஜய் டிவியில் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்ட போதும் சுஜிதா முடியாது என்று சொல்லிவிட்டதால் விஜய் டிவி சுஜிதா மேல் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி வந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

சுஜிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து கலகலப்பாக இந்த நிகழ்ச்சி செல்லும் என்றும் ஏற்கனவே பிரியங்கா இருக்கும் இடத்தில் கலகலப்பு இருக்கும் என்பதால் சீசன் 5 கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...