24 6620b6e7ac824
இலங்கைசெய்திகள்

இலங்கை மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை

Share

இலங்கை மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கை நிதி அமைச்சின் மூன்று முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் (Excise Department) 17 உயர்மட்ட பதவிகள் பல மாதங்களாக வெற்றிடங்களாக உள்ள நிலையில் அன்றாடக் கடமைகளைச் செய்வதற்குக் கூட கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையுடன் திணைக்களம் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் திணைக்களத்தின் ஒட்டுமொத்த உயர்மட்ட அதிகாரிகளும் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதோடு இந்த விவகாரத்தில் எந்த தீர்வும் காணப்படாத பட்சத்தில் நிலைமை மோசமடையலாம் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.

தற்போதுள்ள அதிகாரிகள், வெற்றிடங்களாக உள்ள 17 அதிகாரிகளின் பணிகளையும் மேலதிகமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தினசரி வழக்கமான பணிகளை மேற்கொள்வது கூட புதிய சவாலாக மாறியுள்ளது.

துறைத் தலைவர், மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிகளை தவிர, ஒரு கூடுதல் மதுவரி ஆணையாளர் நாயகம், ஐந்து மதுவரி ஆணையாளர்கள், ஏழு துணை மதுவரி ஆணையாளர்கள் மற்றும் பல உதவி மதுவரி ஆணையாளர்கள் போன்ற பதவிகள் தற்போது வெற்றிடங்களாக உள்ளன.

இந்த பிரச்சினையைப் பற்றி பல எழுத்து பூர்வ சமர்ப்பிப்புகள் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் நிதியமைச்சின் பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

எனினும் பல மாதங்களாகியும் குறித்த விடயம் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று மதுவரித்திணைக்கள உயர்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வருமான இலக்காக 232 பில்லியன் ரூபாய்களை ஈட்டவேண்டும் என்றும் மதுவரித்திணைக்களத்துக்கு நிதியமைச்சு பணித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...