விஜய் டிவி கைவிட்டாலும் வேற டிவியில் என்ட்ரி.. மீண்டும் சீரியலுக்கு வரும் ரச்சிதா மகாலட்சுமி..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விஜய் டிவியில் நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது வேறொரு டிவியில் அவர் ஒரு புதிய சீரியல் நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரச்சிதா மகாலட்சுமிக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் குறிப்பாக கன்னட திரைப்படத்தில் அவர் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. தமிழில் கூட மூன்று படங்களில் அவர் சில கேரக்டரில் நடித்து வந்தாலும் அவருக்கு திருப்தி அடையும் வகையில் கேரக்டர் அமைந்ததா என்பது கேள்விக்குறியே. இருப்பினும் படம் வெளியானால் தான் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் செய்வதற்கு பதிலாக மீண்டும் தொலைக்காட்சிகளில் நாயகி ஆகலாம் என்று முடிவு செய்து அவர் சில தொடர்களுக்கு முயற்சி செய்தபோது தற்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் அவரை எந்த சீரியலுக்கும் இதுவரை அழைக்காத நிலையில், ஜீ டிவி அவருக்கு கை கொடுத்திருப்பதாகவும் ஜீ டிவியில் ஆரம்பமாக உள்ள புதிய தொடரில் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரச்சிதா மகாலட்சுமி நடிக்கும் ஜீ டிவி சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அவர் ஜீ டிவியில் ’மசாலா குடும்பம்’ ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் காளிதாஸ்’ ’நாச்சியார்புரம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நிலையில் தற்போது ஜீ டிவியில் மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவி தன்னை கைவிட்டாலும் ஜீ டிவி தன்னை கைவிடவில்லை என்று அவர் பெருமையாக தனது வட்டாரத்தில் கூறிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- bigg boss rachitha
- dinesh rachitha
- nini 2 rachitha
- rachita
- rachita ram
- rachitha
- rachitha angry
- rachitha cry
- rachitha crying
- rachitha dinesh
- rachitha dinesh baby
- rachitha dinesh divorce
- rachitha drawing
- rachitha husband
- rachitha interview
- rachitha live
- Rachitha Mahalakshmi
- rachitha mahalakshmi dance
- rachitha mahalakshmi youtube channel
- rachitha ram
- rachitha status
- rachitha vs dinesh
- saravanan meenatchi rachitha
- serial actress rachitha interview
- சினிமா செய்திகள்
- டிவி சீரியல்