24 661ca2d1626c8
சினிமாசெய்திகள்

39 வயது நடிகைக்கு முடிந்த நிச்சயதார்த்தம்.. மனம் திறந்து பேசிய விஷால்.. இருவருக்கும் இடையே இருந்த காதல் கிசுகிசு

Share

39 வயது நடிகைக்கு முடிந்த நிச்சயதார்த்தம்.. மனம் திறந்து பேசிய விஷால்.. இருவருக்கும் இடையே இருந்த காதல் கிசுகிசு

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் துப்பறிவாளன் 2.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வருகிற 2026 தேர்தலில் களமிறங்குவேன் என விஷால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலும் 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் கூட இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை போகவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே, நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் என பதிலை கூறிவிடுகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஷாலிடம் வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் விஷால் ” வரலக்ஷ்மியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகிறேன். அவர் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை அமைத்திருக்கிறார். திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு பிறகு ஹனுமான் படத்தில் வரலக்ஷ்மியின் கேரக்டர் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவரை நினைந்து நான் மகிழ்ச்சியாகிறேன். அவருடைய கேரியரை தாண்டி அடுத்த கட்டத்திற்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்” என பேசினார் விஷால்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷாலும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் கைகூடவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதன்பின் தொடர்ந்து தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வரலக்ஷ்மி. திரையுலகை சேர்ந்த பலரும், வரலட்சுமிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...