உலகம்
பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்
பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்
பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
திடீரென ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. ஆகவே, பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
டெஹ்ரானிலிருக்கும் பிரான்ஸ் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் பரிந்துரைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் பயணிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக செயல்படுமாறும், கூட்டம் கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.