24 661cca8c1bfe0
உலகம்செய்திகள்

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

Share

ஐநாவால் போரை நிறுத்த முடியாது, உலகு தாங்காது! ஈரான்,கவிஞர் வைரமுத்து வேதனை

இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரானின் மோதலினால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வந்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் துணை நிற்க மாட்டோம் என தெரிவித்தது.

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முயன்றால், மத்திய கிழக்கில் தொடங்கும் மோதல் உலகப்போர் ஆக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல், ஈரான் போரை ஐ.நா நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ்தள பதிவில், ”இஸ்ரேல் மீது ஈரானும், ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக் கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன. உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது, நிறுத்துங்கள் போரை. ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...