24 661a667308da7
இலங்கைசெய்திகள்

தேசத் துரோகியாக அடையாளப்படுத்தப்பட்ட ரணில் : மீண்டும் சிக்கல் நிலை வரலாம்

Share

தேசத் துரோகியாக அடையாளப்படுத்தப்பட்ட ரணில் : மீண்டும் சிக்கல் நிலை வரலாம்

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கூறியவற்றை பொதுமக்கள் கேட்கவில்லை அவரை தேசத் துரோகி என தூற்றினார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும் தோற்றாலும் உண்மையைக் கூறும் தேசிய தலைவர். அவர் 2001இல் சொன்னதைத்தான் இன்று செய்கிறார். 2001இல், அவர் கூறியவற்றை பொதுமக்கள் கேட்கவில்லை. அவர் தேசத் துரோகி என்று ஒதுக்கப்பட்டார்.

2015இல் மீண்டும் சரிசெய்து கொண்டு சென்று மீண்டும் 2019ஆம் ஆண்டு அவர் மாற்ற வேண்டாம், வீதியில் விழுவீர்கள் எனக் கூறினார். அதனையும் மக்கள் கேட்கவில்லை. எனவே சரியான பாதையைக் காட்டுவது நமது கடமை. அவ்வாறு சுட்டிக் காட்டிய பிறகும் மக்கள் ஏற்கவில்லை என்றால் மீண்டும் அதே நிலை வரலாம்.

உலக வங்கி அறிக்கைக்கு அமைய 2022ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியதாகவும், நிலவிய பலவீனங்கள் காரணமாக 2020ஆம் ஆண்டு சர்வதேச சந்தை இழக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 2022ஆம் ஆண்டாகும் போது அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்த முடியாததால் வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையை எட்டியுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடியின் கடுமையான விளைவுகளை ஏழைகள் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்கள் உணராமல் தடுப்பது மிகவும் முக்கியமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால்தான் அஸ்வெசும போன்றவற்றை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற வலுவான பொருளாதார சீர்திருத்தங்களை தொடர வேண்டியது முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வெளியே எந்த வியாபாரமும் இல்லை. இது குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2Fr9gvVk5thEx6gS4iJLDh
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டப் பாவனையாளர் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...

images 1 8
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள்: துப்பாக்கி உரிமம் மற்றும் போராட்டங்களுக்குக் கடும் தடை!

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில...

1712855747
செய்திகள்உலகம்

ஜப்பானின் அணு ஆயுத இலட்சியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் – வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்,...

articles2F2sWN4GIo004Rm34vnB0h
செய்திகள்அரசியல்இலங்கை

தரமற்ற தடுப்பூசிகளால் இருவர் பலி – சஜித் பிரேமதாச அம்பலம்!

குமட்டல் மற்றும் வாந்திக்காக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நச்சுத்தன்மை அடைந்ததால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த...