tamilni 36 scaled
சினிமாசெய்திகள்

காதலியுடன் சேர்ந்து பெற்ற மகள் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்

Share

காதலியுடன் சேர்ந்து பெற்ற மகள் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்

மனைவி விட்டு விட்டுச் சென்ற ஆத்திரத்தில், மகள் உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திய ஜேர்மானியர் ஒருவருக்கும் அவரது காதலிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Springe என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 30 வயது நபர், ஒரு வயதே ஆன தனது மகள் உடலில், ஊசி மூலம் பாதரசத்தை ஏற்றியுள்ளார்.

அந்தக் குழந்தை பிறந்ததும் அதன் தாய் தன்னைப் பிரிந்து சென்றதால், அந்தப் பெண்ணைப் பழிவாங்க, அந்தப் பிஞ்சுக் குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடல் முழுவதும் கொப்புளங்களுடன் அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளுக்கு என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.

மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகே, அவளது உடலில் பாதரசம் ஏற்றப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், பின்னர் அந்த நபரும், அவரது புதுக்காதலியான 34 வயது பெண்ணொருவரும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பாதரசத்தை ஏற்றுவதால் உடனடியாக உயிர் போகாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அந்தக் குழந்தைக்கு மரண வலியை ஏற்படுத்தவே தாங்கள் அப்படிச் செய்ததாகவும் இருவரும் பின்னர் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

அந்தக் குழந்தையின் தந்தைக்கு 13 ஆண்டுகளும், அவரது காதலிக்கு 12 ஆண்டுகளும் சிறைந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...