இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

Share

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் இறந்துள்ளனர்.

இரைப்பைப் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர்.

சுவாசாப் புற்றுநோயால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர்.

கருப்பைப் புற்றுநோயால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். கருப்பைக் கழுத்துப் புற்றுநோயால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்றுநேய்களால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தைரொய்டுப் புற்றுநோயால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை உரிய வகையில் மேற்கொள்ளும் போது குறித்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு, ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...