24 661731ef48791
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்!

Share

போக்குவரத்து அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்!

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன் சிறிய லொறியொன்றில் பயணித்த போது, போக்குவரத்து பொலிஸார் லொறியை நிறுத்தியுள்ளனர்.

குறித்த இளைஞன் லொறியை நிறுத்தாது சென்றதால் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வாகனத்தை நிறுத்தி அவரையும் அவரது நண்பரையும் கை கால்களை கட்டி வாகனத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாக்குதலால் இளைஞனின் விதைப்பைகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் மூலம் விரைகள் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மதவாச்சி துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திலிஷா சங்கீத் என்ற இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டி சென்ற லொறியை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

குறித்த இளைஞனும் அவருடைய நண்பரும் மது போதையில் இருந்ததுடன் கைது செய்ய சென்ற போது அந்த இளைஞன் லொறியில் விழுந்து அனர்த்தத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை லொறியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் சட்டவிரோத மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
26 697b3f976a4cc
செய்திகள்உலகம்

விஷ்மாவின் உயிரைக் காப்பாற்ற மூன்று வாய்ப்புகள் இருந்தன: ஜப்பானிய நீதிமன்றத்தில் மருத்துவர் அதிரடி சாட்சியம்!

ஜப்பானின் நாகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021-இல் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம்...

1001225020
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் 40 வருட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது: பற்றைக்காடாக இருந்த ‘விதானையார் வீதி’ விவசாயிகளுக்காக மீளத் திறப்பு!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு பகுதியில், கடந்த 40 வருடங்களாகக்...

accident 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பளையில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 63 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே பலி!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில்...

image 666aa8c037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

6-ஆம் தர மாணவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தம்: 2030 வரை தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படும் எனப் பிரதமர் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இந்த ஆண்டு 6-ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் உள்வாங்குவதற்கான விசேட...