உலகம்
தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்
தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்
தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கூறிய உச்சநீதிமன்றம் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குஷ்புவை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கடந்த 2011 -ம் ஆண்டில் தஞ்சாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறியதாகக் கூறி தஞ்சாவூர் வழக்கில் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடடு செய்த துரைமுருகனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதிலிருந்து இரண்டரை ஆண்டுகளாக ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர், ஜாமீனில் இருக்கும் சாட்டை துரைமுருகன் அவதூறு கருத்துளை தெரிவிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் அனைவரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால் தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கேட்ட நீதிபதிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
மேலும், அவர் தனது ஜாமீன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.