24 66119749a2fac
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

Share

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உமா சத்யசாய் கத்தே என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரணம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற 10-வது சம்பவம் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த தகவலை நிவ்யோர்க்கில் உள்ள இந்திய தூதரகம், உறுதி செய்துள்ளது.

உமா சத்யசாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை இந்திய மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...