24 6611d2017cfad
உலகம்செய்திகள்

பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Share

பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்கா(America) – இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த் வெஸ்டர்ன்(Northwestern) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர் பரப்பினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலத்தடி நீர் ஆதாரம் பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர் பரப்பு, பூமியின் புவியியல் மற்றும் நீர் சுழற்சியை உணர புதிய வழிகளை இந்த ஆராய்ச்சி தொடக்கப்புள்ளி என்றும் பூமியின் நீரின் தோற்றத்தை ஆராயும் போது இது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் ஒன்றையே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுடன் பூமியின் நீரின் தோற்றத்தை நாம் உணரும் விதத்தை சவாலுக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில்,

‛‛நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளதுடன் இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.

பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது.

அந்தவகையில் 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நிலஅதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது.

இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு குறித்த விபரம் 2014 ஆம் ஆண்டில் “ Dehydration melting at the top of the lower mantle ”என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையாக வெளியாகி இருந்தது.

அதில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் நீல நிற பாறைக்குள் பூமிக்கடியில் பிரமாண்ட கடல் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...