24 6611e61a18473
இலங்கைசெய்திகள்

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் இலங்கை வீரர்

Share

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் இலங்கை வீரர்

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, பங்கேற்க மாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை குணமடைவதற்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் நடப்பு ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக வனிந்து ஹசரங்கவின் நிலைமையை சோதனை செய்த டுபாயில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் முன்னெச்சரிக்கையாக ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் ஏலத்தில் வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியிருந்த ரோயல் செலெஞ்சர்ஸ் அணி இந்த வருடம் அவரை விடுவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளுக்காக அடிப்படை விலையான 1.5 கோடி இந்திய ரூபாவுக்கே அவரை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஏலத்தில் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...