images 6
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் தீர்மானம்

Share

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் தீர்மானம்

பண்டிகைக் காலத்தில் அதிக இலாபம் ஈட்டி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சில புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் நுகர்வோரை தொடர்ச்சியாக அறிவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது இலாபத்தைக் குறைக்க உதவும் என்பதுடன், உணவு இறக்குமதியாளர்களின் பட்டியல், அளவு மற்றும் சுங்க விலை தொடர்பான அறிக்கையை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு வழங்குமாறு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

சட்டவிரோத இலாபம் ஈட்டும் வர்த்தகர்களிடம் இருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய வரிகளை அறவிடுவதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தாதவர்கள் 4479 பேர் உள்ளடங்கியுள்ளதுடன், அவர்களில் எண்பத்தெட்டு பேர் வரியாக ஐநூறு கோடி வரை செலுத்த வேண்டியவர்களாவர்.

நூறு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாத 90 பேரிடமிருந்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

குறுகிய கால அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதுடன், மாறாக ஏழாயிரம் உரிமப் பிரிவுகளின் கீழ் மட்டுமே இறக்குமதி உரிமங்களை வழங்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் முறைகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு பொருளின் இறக்குமதி விலை மற்றும் வணிகர் பெறும் இலாபம் பற்றிய அறிவைப் பெறுவார்கள்.சட்டவிரோத இலாபங்களை மட்டுப்படுத்த இது உதவும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் போன்றவற்றிற்கு இந்த பணிப்புரைகளை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...