உலகம்
முழுவதும் தங்கத்தாலான கழிவறையைத் திருடிய பிரித்தானியர்
முழுவதும் தங்கத்தாலான கழிவறையைத் திருடிய பிரித்தானியர்
பிரித்தானிய அருங்காட்சியகம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தங்கத்தாலான கழிவறை ஒன்று திருடப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்கக் கழிவறை ஒன்று, Blenheim மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தபோது ஒரு நாள் இரவில் மாயமானது.
இந்நிலையில், Wellingborough என்னுமிடத்தைச் சேர்ந்த James Jimmy Sheen (39) என்பவர் அந்தக் கழிவறையைத் திருடியதாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் ஏற்கனவே பல்வேறு திருட்டுக் குற்றங்களுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
முழுவதும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த கழிவறையின் மதிப்பு 4.8 மில்லியன் பவுண்டுகள். அதாவது, இலங்கை மதிப்பில் 1,80,37,04,673.60 ரூபாய் ஆகும்.
விடயம் என்னவென்றால், அமெரிக்கா என பெயரிடப்பட்ட அந்த கழிவறை இப்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது உருக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.