படத்தை தியேட்டரில் பாருங்க.. படம் பிடிக்கல என்றா என்னை செருப்பால் அடியுங்க..! ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் பகிர்
தமிழ் சினிமாவில் திட்டம் இரண்டு மற்றும் ஜிவி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் தற்போது இயக்கிய படம் தான் ஹாட்ஸ்பாட்.
இந்த படத்தில் கௌரி கிஷன், ஆதித்யா, பாஸ்கர், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கலையரசன், ஜனனி ஐயர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாத் இசையமைத்துள்ளார்.
நான்கு கதைகளை கொண்ட இந்த படம் சுவாரஸ்யமான திரைக்கதை உடன் எடுக்கப்பட்டு இருப்பதாக சிறப்பு திரையிடலை பார்த்த விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். இந்தப் படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
இப்போதெல்லாம் பெரிய ஸ்டார்களின் படங்களைத் தவிர சின்ன படங்களை முதல் நாள் வரவேற்பதில்லை. ஒருவாரத்திற்கு அத்தனை படங்களும் வெளியாகின்றன. ஆனால் கூட்டம் வராதால் அந்த படங்கள் இரண்டு நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடுவதில்லை. இப்படியான சூழலில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தான் இந்த படத்தின் பெயரை அப்படியே வெளியிட்டோம்.
ஆனால் உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரஸ்யமாக இந்த படத்தில் சொல்ல முயற்சித்து தான். படம் பார்த்த எல்லா தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் எதிர்பார்த்த கூட்டம் படத்திற்கு கிடைக்கவில்லை. இந்தப் படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள். உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
- 70 mm cinema
- cinema
- cinema gossip 70mm
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- cinema updates
- hot tamil cinema news
- kollywood cinema
- latest tamil cinema news
- News
- tamil cinema
- tamil cinema (film genre)
- tamil cinema actress news
- tamil cinema hot
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news today
- tamil cinema review
- tamil cinema today news
- tamil cinema updates
- Tamil news
- vnews