tamilnaadi 154 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

Share

முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று(28.03.2024) மன்னாகண்டல் மற்றும் பேராற்று பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து அதனை டிப்பரில் ஏற்ற முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதோடு 22 மிசின் லோட் மணல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏற்ற முற்பட்ட டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் சான்று பொருட்களையும் குறித்த நபர் அனுமதிப்பத்திரம் அற்ற நிலையில் மணல் ஏற்ற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த வழக்கினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், சுற்றுச்சூழல் மற்றும் கனியவளத்திணைக்களத்தினால் பேராறு வசந்தபுரம் பகுதிகளில் வழங்கப்பட்ட மணல் அகழ்வு தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட அனுமதிகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...