24 66060b22b4952
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மார்ச் மாத நாணயக் கொள்கை விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) முதல் இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு எதிர்வரும் காலாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022ல் பதிவான 7.3 சதவீத எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, ​​2023 இன் இரண்டாவது ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட சாதகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கடந்த ஆண்டு (2023) ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 2.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...