24 66039d673ba5f
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

Share

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டவுள்ள நிலையில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் என்று சிலர் குறிப்பிடுவது பாரிய அழிவுக்கு இடப்படும் அடித்தளமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (26) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு எவரேனும் முயற்சிப்பார்களானால், அவர்களால் இரண்டு வாரங்கள் கூட இந்நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

நாம் கடன் பெற்றுள்ளதும், பெற்ற கடனை மீளச் செலுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதும், கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதும் இலங்கை அரசாங்கத்தினாலன்றி, ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபராலோ அல்லது பிறிதொரு நபராலோ அல்ல.

இலங்கை அரசாங்கம் என்பது தற்போதைய அரசாங்கத்தைப் போன்றே, இனிவரவுள்ள அரசாங்கங்களையும் குறிக்கும். அதற்கமைய தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புக்கள், அடுத்த அரசாங்கத்துக்கும் உரித்துடையதாகும்.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட திட்டங்களை மதிக்காத, தன்னிச்சையான அல்லது முட்டாள் தனமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமானால் அந்த அரசாங்கம் பாரிய அழிவினையே எதிர்கொள்ளும்.

எனவே இந்த ஒப்பந்தத்தை மாற்றினால் சர்வதேசத்துடன் எந்தவொரு கொடுக்கல், வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. அத்தோடு மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான கருத்தினை கூறும் தரப்பினர் அவற்றை வெளிப்படுத்துவதும் நன்மைக்கே. அப்போது தான் மக்களுக்கு இவர்களின் இயலுமை என்ன என்பது புரியும்.” என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...