1 13 scaled
சினிமாசெய்திகள்

’ரிபெல்’ படத்தை அடுத்து 2 வாரங்களில் 2 படங்கள்.. ஜிவி பிரகாஷின் லைன் அப்கள்..!

Share

’ரிபெல்’ படத்தை அடுத்து 2 வாரங்களில் 2 படங்கள்.. ஜிவி பிரகாஷின் லைன் அப்கள்..!

ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் நல்ல வசூலை பெற்றதாகவும் கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட் தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

கல்லூரி மாணவனாக ஜிவி பிரகாஷ் நடித்திருந்த இந்த படம் முதல் பாதி ரொமான்ஸ் ஆகவும் இரண்டாம் பாதியாக அதிரடி ஆக்சன் ஆகவும் இருந்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த ’கள்வன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த இன்னொரு படமான ’டியர்’ என்ற படமும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4, ஏப்ரல் 11 என அடுத்தடுத்த வாரங்களில் ஜிவி பிரகாஷ் தனது படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் ஏற்கனவே வெளியான ’ரிபெல்’ படத்தையும் சேர்த்து இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஜிவி பிரகாஷ்-க்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜிவி பிரகாஷ் பிசியாக உள்ளார் என்பதும் அவர் தற்போது ’தங்கலான்’ ‘அமரன்’ ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ’சூர்யா 43’ உட்பட கிட்டத்தட்ட 10 படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...