24 6600ec608b87a
இலங்கைசெய்திகள்

கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

Share

கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

கலால் திணைக்களம் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீத வளர்ச்சி கண்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மது உற்பத்தி 657,000 லீற்றரால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...