ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்த தொகுப்பாளர் விஜய்! சத்தமின்றி ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் மிர்ச்சி விஜய். இவர் தற்பொழுது பல ரியாலிட்ரி ஷோக்களைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இது தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்த படத்திற்கு “Wife” என பெயர் வைக்கப்பட்ட நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியீட்டுள்ளனர்.
அறிமுக இயக்குனர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில், மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் நடிக்கும் “Wife” படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் ஹேமநாதன் கூறுகையில், கணவன் மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டு தான் இந்த படம் எடுக்கப்பட்டது. அதனால் தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். ஒரு சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத சக்தி இருக்குதோ அதுபோலவே ஒவ்வொரு வீட்டிலும் மனைவிக்கு ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு உண்டு.
திருமணத்துக்கு பிறகும் மலரும் அன்பை எமோஷனலாக எடுத்து சொல்வதே என் நோக்கம். இதற்கு முன் இந்த தலைப்பு எந்த படத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்ற விடயம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்தாதது எனக்கு அதிர்ஷ்டமாக இருந்துள்ளது.
மிர்ச்சி விஜய் இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கதாநாயகனாக நடிக்கிறார்.
‘டாணாக்காரன்’ படத்தில் நடித்த புகழ் பெற்ற நடிகை அஞ்சலி நாயர் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், ,விஜயபாபு, பல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
- mirchi vijay
- mirchi vijay and gana bala
- mirchi vijay and kiki show
- mirchi vijay and shivangi
- mirchi vijay and sivaangi behindwoods
- mirchi vijay behindwoods
- mirchi vijay comedy
- mirchi vijay interview
- mirchi vijay singing
- mirchi vijay singing gana song
- mirchi vijay singing in behindwoods
- mirchi vijay speech
- mirchi vijay web series
- mirchi vijay wedding
- mirchi vijay wedding video
- rj mirchi vijay
- rj vijay
- sivaangi mirchi vijay gaana