24 65fb1ffaa43dd
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில்

Share

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில்

“எவ்வளவு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் மூலம் சமுர்த்தியின் மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்குவதுடன், பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூற வேண்டும்.

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் கடன் வாங்குவது தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...