மில்க் பியூட்டி நடிகை தமன்னா முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சிறுவயதில் இருந்தே அதாவது தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. 2005ம் ஆண்டு வெளியான சந்த் சா ரோஷன் செஹ்ரா தான் தமன்னாவின் முதல் திரைப்படம்.
அப்படத்திற்கு பிறகு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்தவர் அப்படியே தமிழில் கேடி படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திற்கு பிறகு வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, சிறுத்தை, வீரம் என தொடர்ந்து நடித்தார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்த தமன்னா மார்க்கெட் தெலுங்கிலும் மாஸாக அமைந்தது. ஹிந்தியிலும் படங்கள் நடிக்க இப்போது பான் இந்தியா நாயகியாக கலக்கி வருகிறார்.
கியூட்டாக நடித்துவந்த தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகத்தில் கிளாமராக நடித்து ரசிகர்களை திணறடித்துவிட்டார்.
17 ஆண்டுகளாக திரையுலகில் பயணிக்கும் நடிகை தமன்னா தற்போது ஒரு படத்துக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஆடிய காவாலா பாடல் போல ஐட்டம் பாடல் என்றால் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. விளம்பரங்களில் நடிக்கும் தமன்னா மாதம் ரூ. 1 கோடி வரை சம்பாதிக்கிறாராம்.
மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடும், ஹைதராபாத், சென்னையில் பல கோடிகளில் பிளாட்டும் வாங்கிப் போட்டுள்ளார். அதேபோல், BMW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இவைகளின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரிகிறது.
நடிகை தமன்னா வைர நகைக்கடை ஒன்றை தொடங்கியிருக்கிறார். வைட் அண்ட் கோல்டு என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கடையில் வியாபாரம் ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
இந்த வைர நகைக்கடை மும்பையில் செயல்பட்டு வருகிறது.
முக்கியமாக தமன்னா 2 கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் ஒன்று வாங்கியுள்ளாராம். நடிகைகளிலேயே தமன்னா வைத்திருக்கும் வைர மோதிரம் தான் ரொம்பவே காஸ்ட்லி என சொல்லப்படுகிறது.
படங்கள், விளம்பரங்கள், சொந்த தொழில் என சம்பாதிக்கும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 120 கோடி என கூறப்படுகிறது.
- 70 mm cinema
- breaking news
- cinema gossip 70mm
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- cinema Tamil Actress
- kapamilya news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- latest tamil news
- News
- news in tamil
- news tamil
- news18 tamil nadu news
- pinoy showbiz news
- Tamannaah
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil live news
- tamil nadu news
- Tamil news
- today tamil news
- trending news
- viral news