tamilni 267 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

Share

கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

உயிரச்சுறுத்தல் ஏற்பட்ட போது நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் முன்னிலையாகியதை கோட்டாபய ராஜபக்ச மறந்து விட கூடாது என தேசிய பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,”கோட்டாபய வெளியிட்டுள்ள புத்தகத்தில் அவரது சிங்கள பௌத்த இருப்பை இல்லாதொழிக்க நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் தவறான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றால் தான் அவரது சிங்கள பௌத்த உறுதிப்பாடு இல்லாமல் போனது.

அரகலயவின் போது கோட்டாபய தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை விட்டுச் வெளியேறுவதற்கு நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டேன் என்பதை அவரது பிரத்தியேக பணியாளர்கள் நன்கு அறிவார்கள்.

கோட்டாபயவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவரது முறையற்ற நிர்வாகத்துக்கே எதிர்ப்பு தெரிவித்தோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய சிங்கள பௌத்த கொள்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். ஆகவே புத்தகம் எழுதுவது பயனற்றது.

தன்னை தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாதற்கு கோட்டாபய அந்த புத்தகத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். உண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய வாக்குமூலம் வழங்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...