22 2 scaled
இலங்கைசெய்திகள்

301 ரூபாவாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர்

Share

301 ரூபாவாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர்

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(13.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (13.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை 301.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 232.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 222.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 328.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாவுக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 301 ரூபா வரையில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...