tamilni 222 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வைத்தியத்துறையின் புதிய சாதனை

Share

இலங்கை வைத்தியத்துறையின் புதிய சாதனை

இலங்கை வைத்தியத்துறையில் புதிய சாதனை முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை போதனா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவருக்கு இந்த மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறுவைச்சிகிச்சையானது (11.3.2024) வெற்றிகரமாக இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிகரமாக இடம்பெற்ற சத்திரசிகிச்சை தொடர்பில் மேலும் தெரியவருகையில், 72 வயதான முத்துமெணிக்கே பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பெண். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவரின் முதுகு வலி குணமாகவில்லை.

இந்த பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இந்த சத்திர சிகிச்சையானது இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படாத மிக அரிய வகை சத்திர சிகிச்சை என்பதும் விசேட அம்சமாகும்.

எண்டோஸ்கோபிக் முறையில் முதுகுத்தண்டில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது.

ஏனெனில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது இல்லை, மேலும் மயக்க மருந்து இல்லாமல் குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண குணமடைந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...