tamilnis 1 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி: பெண் கைது

Share

யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி: பெண் கைது

யாழில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பெண்ணின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார்.

அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...