tamilni 196 scaled
சினிமாசெய்திகள்

எனக்கே டாப் காம்படிஷனா..? புதிய தளபதியை கலாய்த்த வெங்கட் பிரபு..! பதிலடி கொடுத்த பிரபலம்

Share

எனக்கே டாப் காம்படிஷனா..? புதிய தளபதியை கலாய்த்த வெங்கட் பிரபு..! பதிலடி கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் யூடியூப் பிரபலமான காத்து கருப்பு கலை ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதற்கான படப்பிடிப்பு நேற்றைய தினம் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

காத்து கருப்பு கலையை ஹீரோவாக வைத்து இயக்கும் இயக்குனர், கலை தான் அடுத்த தளபதி என ஒரு பேட்டியும் நேற்றைய தினம் கொடுத்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதாவது, ‘ரத்த பூமி’ என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்கு காத்து கருப்பு கலை கமிட்டாகி உள்ளார். இதன்போது ஹீரோவான கலையை காட்டி இவர்தான் ‘அடுத்த தளபதி, ஆக்சன் எல்லாம் பக்கவா பண்ணுவார்’ என கலையுடன் இருந்த ஒருவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அவர் இயக்குனரா என்று கூட சரியா தெரியவில்லை.

அத்துடன் காத்து கருப்பு கலையும், அந்த படத்துல ஒத்த விரல்ல ஓடும் ரயிலை நிப்பாட்டுவது போல நடிச்சிருக்கன். அதுல ஒரு வசனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போய்ட்டு. அதனால தான் அந்த படத்துக்கு ஓகே சொன்னேன் எனவும் சொல்லியிருந்தார்.

நிலையில், இந்த வீடியோவை பார்த்த வெங்கட் பிரபு, நமக்கு டாப் காம்படிஷன் கொடுப்பாங்க போலயே என பதிவிட்டு அவர்களின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் கிரின்ச் காட்சிகளை கலாய்த்து படமெடுத்த இயக்குனர் சி.எஸ் அமுதனையும் டேக் செய்து இருந்தார்.

இதன் போது அதற்கு பதில் அளித்த அமுதன், நாம் இருக்கிற இடத்தை நினைத்து சந்தோஷப்படக்கூடாது. உழைச்சிக்கிட்டே இருந்தா தான் இவங்களோட காலத்துல இருக்க முடியும் என ரிப்ளை செய்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...