tamilnaadi 82 scaled
இலங்கைசெய்திகள்

இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி

Share

இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

ரம்பேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த குழுவினர் மீது இன்று அதிகாலை ஜீப் வண்டி ஒன்று மோதி விட்டு சென்றுள்ளது.

மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் வீதியில் நடந்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் காயமடைந்த ஐந்து பேரும் மிஹிந்தலை ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிசிச்சை பலனின்றி மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றைய இரு யுவதிகளும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரும் 21, 19 மற்றும் 14 வயதுடையவர்கள். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுரம் வீதியில் ரம்பேவ நகரத்தில் இருந்து வந்த ஜீப் ஒன்று இந்த குழுவினர் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
04 7
இலங்கைசெய்திகள்

ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாட்டம்: பழைய பொலிஸ் தலைமையகம் அருகே 2 கமாண்டோக்கள் கைது!

கொழும்பிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கியுடன் சிவில்...

image 55b1ad95b8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திலினி பிரியமாலிக்கு பிடியாணை: ஹோமாகம நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக...

1768145880 unnamed
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மின்சார சபை விடுதியில் புதையல் வேட்டை: 4 ஊழியர்கள் அதிரடிப்படையினரால் கைது!

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் சுற்றுலா விடுதி வளாகத்தில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிக்...

download 2023 06 03T063823.084
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவருக்கு விடுகைப் பத்திரம் வழங்க மறுத்த அதிபர்: மனித உரிமை அதிகாரியின் தலையீட்டால் கிடைத்த தீர்வு!

நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2-இல் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர் ஒருவருக்கு விடுகைப்...