tamilni 641 scaled
சினிமாசெய்திகள்

வெற்றிமாறனை அடுத்து சுதா கொங்கராவுக்கும் அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. இனி பாலிவுட்டுக்கே முன்னுரிமை..!

Share

வெற்றிமாறனை அடுத்து சுதா கொங்கராவுக்கும் அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. இனி பாலிவுட்டுக்கே முன்னுரிமை..!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ’வாடிவாசல்’ திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா பாலிவுட்டில் உருவாகும் ’கர்ணா’ என்ற படத்தில் நடிக்க கமிட்டானதை தொடர்ந்து அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதனால் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா தான் ஏற்கனவே இயக்கி வந்த ’சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், ’சூர்யா 43’ படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் ’கர்ணா’ படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது சூர்யா கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த படம் தனக்கு பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய எண்ட்ரியாக இருக்கும் என்றும் அவர் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இனி வருங்காலத்தில் சூர்யா பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்த போவதாகவும் கோலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே அவர் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. வெற்றிமாறனை அடுத்து சுதா கொங்கரா படத்தையும் சூர்யா தாமதம் செய்தது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் பாலிவுட்டில் அவர் இனி சுறுசுறுப்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...