tamilni 540 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

Share

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

இலங்கைக்கு “நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

விஜயபாகு என்ற பெயரைக்கொண்ட மூன்றாவது கண்காணிப்பு கப்பலை இலங்கையின் உரிமைக்கு மாற்றும் நிகழ்வின்போது கொழும்பு துறைமுகத்தில் வைத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் நான்காவது கப்பலுக்கான முயற்சிக்கு 9 மில்லியன் நிதியுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையின் துணை செயலாளர் வர்மா கூறியுள்ளார்.

மேலும், இந்த கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டவுடன், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

அத்துடன் இந்தக் கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கண்காணிப்பில் ஈடுபட வழியேற்படும் அதேநேரம், இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கடல் பாதைகளை கடக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்...

images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...