tamilni 498 scaled
உலகம்செய்திகள்

இட்லி தோசையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

Share

உலகின் பல்லுயிர்தன்மையை பாதிக்கும் உணவுகள் பட்டியலில் இட்லி, தோசை போன்றவை இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான 151 உணவு வகைகளைத் தெரிவு செய்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், உலகின் பல்லுயிர்தன்மையை மனிதர்களின் உணவுப்பழக்கங்கள் வெகுவாகப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மாடு போன்ற விலங்குகளை வெட்டும்போது
உண்ணும் உணவு எப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல காரணங்களை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.

பொதுவாக இறைச்சி உண்ணுவதால் அதிக பல்லுயிர்த்தன்மை பாதிப்பு ஏற்படுகிறது. மாடு போன்ற விலங்குகளை வெட்டும்போது வெளியாகும் வளிமண்டல மீத்தேன்கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறுகின்றனர்.

ஒரு உணவை உற்பத்தி செய்ய அழிக்கப்படும் பறவை மற்றும் பூச்சியினங்களும் பல்லுயிர்தன்மையைப் பாதிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில் ஒரு உணவைத் தயாரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இட்லியும், 7ஆவது இடத்தில் ராஜ்மாவும், 20ஆவது இடத்தில் தாலும், 22ஆவது இடத்தில் சன்னா மசாலாவும், 96 ஆவது இடத்தில் ஆலு பரோட்டாவும், 103 ஆவது இடத்தில் தோசையும் இடம்பெற்றுள்ளன.

ஆச்சரியப்படும் விதமாக உருளைக்கிழங்கு பொரியலான ப்ரெஞ் பிரைஸ் (French fries) கடைசி இடத்தைப் பெற்று உலகின் பல்லுயிர் தன்மைக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் உணவாக இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...