tamilni 469 scaled
உலகம்செய்திகள்

பூமியில் விழப்போகும் செயற்கைகோள்! விஞ்ஞானிகள் அச்சம்

Share

செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

”Grandfather” எனும் செயற்கைகோளை 1995ஆம் ஆண்டு ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.

இந்த நிலையில் Grandfather செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘செயற்கைகோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என கூற முடியவில்லை. இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருக்கிறது’ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் Grandfather செயற்கைகோள் பூமியில் விழலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...