tamilni Recovered Recovered 5 scaled
சினிமாசெய்திகள்

புறநானூறு பட ஷூட்டிங்? தாமதமாக என்ன காரணம்? சூர்யா படம் வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருக்கும் போல!

Share

புறநானூறு பட ஷூட்டிங்? தாமதமாக என்ன காரணம்? சூர்யா படம் வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருக்கும் போல!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் `கங்குவா’. அந்தப் படம் நன்றாக வந்திருப்பதில் சூர்யா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறதாக சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதற்கு பிறகு அடுத்து அவருக்கு சுதா கொங்கரா படமான ‘புறநானூறு’ படத்தைத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இது ஆரம்பிப்பதில் தாமதம் ஆகுவதாக தகவல் கிடைத்துள்ளது.

சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்பு செய்திகளும் வெளியாகின. ஜி.வி.பிரகாஷின் நூறாவது படமாகவும் ‘புறநானூறு’ அறியப்பட்டது. ரொம்பவும் சந்தோஷமாக ஜி.வியும் அதை எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் படத்தை சூர்யாவே தன் 2D பேனரில் தயாரிக்க முன் வந்தார். 2023 அக்டோபரில் ஷூட்டிங் ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள், ஆனால் அது நடக்கவில்லை. பிறகு நிச்சயம் நவம்பரில் ஆரம்பமாகும் என்றார்கள், ஆனால் அப்போதும் தொடங்கவில்லை.

ஆரம்ப அறிவிப்புக்குச் சின்ன டீசருக்காக மட்டுமே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்போது மற்றவர்களின் கால்ஷீட் எல்லாம் கிடைத்து, அதை ஒழுங்கு செய்து ஆரம்பிக்க இந்த வருட ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என முடிவு செய்திருக்கிறார்கள்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

25 692d688ce5175
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இரண்டாம் பாடல் வெளியீடு தேதி – நாளைய தீர்ப்பு பட தினத்தில் எமோஷனல் மாஸ் ட்ரீட்!

நடிகர் தளபதி விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ (Jananaayagan) படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...