tamilnaadi 118 scaled
உலகம்செய்திகள்

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

Share

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யாவில் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி ரஷ்யாவில் இதுவரை 32 நகரகளில் சுமார் 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் திடீர் மரணத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினே காரணமென அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,

”நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய ஜனாதிபதியின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது.

இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.” என்றார்.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள புடினுக்கு, அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.

பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...