tamilni 137 scaled
சினிமாபொழுதுபோக்கு

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் TVK .., விஜயின் புதிய அரசியல் கட்சியால் சர்ச்சை

Share

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் TVK .., விஜயின் புதிய அரசியல் கட்சியால் சர்ச்சை

தமிழ்நாட்டில் ஏற்கனவே TVK என்னும் ஒரு கட்சி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயரும் ஒரே போல இருப்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அளித்திருக்கும் பேட்டியில், “புதிய அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துக்கள். சினிமாவில் இருந்து வரும் ஒருவரை உடனே முதலமைச்சராக்க வேண்டுமா என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.

ஏனெனில் தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளது. அதில் அவரது நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது.

தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் TVK தான். நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சிக்கும் அது தான் ஆங்கில சுருக்கம். அவர் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் இரு கட்சிக்கும் ஒரே பெயர் சாத்தியமில்லாதது.

அவர்களது ஆவணங்களை சரிபார்த்து ஆங்கில சுருக்கத்தில் கூடுதலாக ஒரு எழுத்தைச் சேர்க்கச் சொல்லி தேர்தல் ஆணையம் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் அதை வலியுறுத்தி நாங்கள் மனு கொடுப்போம்” என்றார்.

Share
தொடர்புடையது
33 6
சினிமா

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி ரிப்ளை

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்....

34 6
சினிமா

கண் கலங்கிவிட்டது.. மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின்...

32 6
சினிமா

ஸ்ரீலீலா இல்லை.. அந்த குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பது இந்த முன்னணி நடிகையா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின்...

31 6
சினிமா

வெளிவந்தது நடிகை தமன்னாவின் அடுத்த பட அதிரடி அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும்...