tamilni 131 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்கா

Share

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.​

குறித்த தீர்மானம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று (06.02.2024) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25 வீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50 வீத அதிகாரமும் கிடைக்கும்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...