உலகம்
பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்
பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு முழு உடற் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படவில்லை எனினும் அதற்கு சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.