உலகம்
மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்
மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்
மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு Rap பாடகர் கைது செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
அந்த நிகழ்வில் ராப்பர் கில்லர் மைக் (Killer Mike) மூன்று விருதுகளை வென்றார்.
ஆனால் மேடையில் விருதுகளை பெற்றுக்கொண்ட அவரை அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Rapper Killer Mike, Michael Render, Grammy Awards 2024, Grammys 2024, 66th Annual Grammy Awards, Award ceremony, மூன்று Grammy விருதுகளை வென்ற கையோடு பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட Rap பாடகர்
48 வயதான ராப்பரின் முழுப் பெயர் மைக்கேல் ரெண்டர் (Michael Render). அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் 243(A) PC இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பொலிஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
சிறந்த ராப் ஆல்பம், சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த ராப் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் ராப்பர் மைக் விருதுகளை வென்றார்.
எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் விருது பெற்ற பிறகு, அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார், விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிப்டோ டாட்காம் அரங்கில் நடந்த சண்டைக்காக ராப் பாடகர் மைக் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.
ராப்பர் மைக் தனது பாடல்களில் சமூக நீதி, இனவெறி மற்றும் கறுப்பின பிரச்சனைகள் பற்றி பாடுகிறார்.