24 65be307e87013
உலகம்ஏனையவைசெய்திகள்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

Share

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ் (23). இவருக்கு திருமணமான நிலையில் 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 22 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற நாளில் வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீரை கமலேஷ் வைத்திருந்தார். அந்த வாளியை எதிர்பாராதவிதமாக கமலேஷின் 2 வயது மகன் தட்டி விட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது சோப்பு தண்ணீர்கொட்டியது. பின்னர், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், குழந்தை வரும் வழியிலே உயிரிழந்து விட்டது.

இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...