உலகம்செய்திகள்

அந்த தொல்லை தாங்க முடியவில்லை: உடன் தங்கியிருந்த நண்பனை கொடூரமாக கொன்ற இளைஞர்

Share

அந்த தொல்லை தாங்க முடியவில்லை: உடன் தங்கியிருந்த நண்பனை கொடூரமாக கொன்ற இளைஞர்

இந்திய தலைநகர் டெல்லியில் இயற்கைக்கு புறம்பான ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்திய நண்பனை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 19ம் திகதி டெல்லியின் காஷ்மீர் கேட் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், DDA பூங்காவில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், சுயநினைவற்ற நிலையில் உடல் ஒன்றை, ஆள் ஆரவாரமற்ற பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த நபரின் வாயில் ரத்தம் காணப்பட்டதுடன் கண்ணுக்கு மேல் வெட்டுக் காயம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறியிருந்தது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அந்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள 50 கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

சுமார் 100 பேர்களிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், மரணமடைந்தவர் உத்தரபிரதேச மாநிலம் ஜலோன் மாவட்டத்தை சேர்ந்த Pramod Kumar Shukla (25) என்பது அடையாளம் காணப்பட்டது.

டெல்லியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த சுக்லா, ரெயின் பசேரா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரிகள், சுக்லாவின் அலைபேசி இலக்கத்தை ராஜேஷ் என்பவர் அடிக்கடி பயன்படுத்தி வருவதை உறுதி செய்தனர்.

இந்த ராஜேஷ் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். விசாரணையின் ஒருபகுதியாக உள்ளூர் நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கையில், இந்த ராஜேஷும் சுக்லாவும் நண்பர்கள் என்றும், இருவரும் ரெயின் பசேரா பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17ம் திகதி சுக்லாவுக்கும் ராஜேஷுக்கும் DDA பூங்காவில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதும் பொலிசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து ராஜேஷை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிசார், ஜனவரி 26ம் திகதி பீகாரின் பாட்னா பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லிக்கு அழைத்து வந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சுக்லா தமது நண்பர் என்றும், ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், ஆனால் இயற்கைக்கு மாறான ஆசைக்கு இணங்க தொடர்ந்து தொல்லை தந்து வந்ததாகவும் ராஜேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தொல்லையில் இருந்து தப்பவே கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் ராஜேஷ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 20 வயதேயான ராஜேஷ் நண்பனை கொலை செய்துவிட்டு, சுக்லாவிடம் இருந்த ரூ 18,500 பணத்தையும் அவரது மொபைலையும் பறித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் சுக்லா தொடர்பான தகவல்கள் எதையும் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...

image 1000x630 11
செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: 10 பேருக்கு எதிராக இன்று வழக்கு விசாரணை ஆரம்பம் – சுமந்திரன் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்,...

image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான்...