tamilni 478 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி பெயர் இதுதானா? வெளியான தகவல்

Share

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி பெயர் இதுதானா? வெளியான தகவல்

நடிகர் விஜய் துவங்க இருக்கும் அரசியல் கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய், தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார்.

பட நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் விரைவில் அரசியலில் தடம் பதிக்கும் முடிவில் விஜய் இருக்கிறார்.

இந்நிலையில், அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை, இரவுநேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம் போன்றவை வழங்கியுள்ளார்.

மேலும், வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டங்களில் உதவித்தொகை, பல மாவட்டங்களில் மருந்தகங்கள் என இவரது செயல்பாடுகள் அரசியலை நோக்கியதாகவே இருக்கிறது.

விஜய்யின் மக்கள் இயக்கத்தை அடுத்த ஒரு மாதத்தில் அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் திகதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிக்கு ”தமிழக முன்னேற்றக் கழகம்” என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது விஜய் தரப்பால் உறுதிசெய்யப்படும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...