tamilni 424 scaled
ஏனையவை

வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு

Share

வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1981 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம், இரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நிறைவடையும். அதனை தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு நான்கு அல்லது நான்கு வாரகாலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

மேலும் 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்து. ஆனால் நிதி விடுவிப்பு தாமதமானதால் தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...