tamilni 255 scaled
ஏனையவை

27 வயதில் மணப்பெண் கிடைக்கவில்லை என விரக்தி.., இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Share

திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர், பல மாதங்களாக தனக்கு மணப்பெண் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூன்று மணப்பெண்களை மதுசூதன் பார்த்துள்ளார்.

ஆனால், நடத்தையின் காரணமாக, அந்த மூன்று மணப்பெண்களும் திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இதனால், மதுசூதன் மதுவுக்கு அடிமையானார் எனவும் கூறப்படுகிறது.

அப்போது, அவரது உறவினர்கள் மதுவை நிறுத்திவிட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளனர் ஆனால், மணமகள் கிடைக்காத விரக்தியில் மதுசூதன் தொடர்ந்து குடித்துள்ளார்.

இந்நிலையில், ஜனவரி 5 -ம் திகதி விஷம் அருந்தி மதுசூதன் மயங்கி விழுந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்தில் (விம்ஸ்) சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு மதுசூதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...