சினிமாபொழுதுபோக்கு

வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு கிடைத்த பரிசுத் தொகை

Share
tamilni 231 scaled
Share

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவங்கியது. பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும், போட்டிக்கு இடையே வைல் டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர். குறைந்த வாக்குகளை பெறுபவர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி ஆகியோர் இருந்தனர். மேலும் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்தெடுக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் மணி தேர்வானார். மூன்றாவது இடத்தில் மாயா தேர்வானார்.

இதில் வெற்றியாளராக தேர்வான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு, பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஒரு வீடு, மற்றும் கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...

சினிமாபொழுதுபோக்கு

ரன்னர் அப் பட்டத்தை வென்ற மணிச்சந்திரா-மாயா! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

Share
tamilnic scaled
Share

பரபரப்பாக நடைப்பெற்று வந்த பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி, ஒரு வழியாக முடிவு பெற்றதை தொடர்ந்து, இதில் டைட்டிலை வென்றது யார், ரன்னர் அப் பட்டத்தை வென்றது யார் என்ற விவரங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன. எப்போதும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி லைவ் நிகழ்ச்சியாக ப்ளே செய்யப்படுவதுண்டு. ஆனால் இம்முறை, இறுதிப்போட்டி ஒளிபரப்பாவதற்கு முன்பே ஷூட்டிங் முடிந்து விட்டது.

கமல்ஹாசன் (BB 7 Host Kamal Haasan) தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில் பலமான போட்டியாளர்களாக பலர் களமிறங்கினாலும், கடைசியில் 5 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாயா, அர்ச்சனா, மணிச்சந்திரா, தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர்தான் அந்த 5 பேர். இந்த ஐந்து பேரில், வி.ஜே.அர்ச்சனாதான் டைட்டில் வெல்லுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே, அவர்தான் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். இதுவரை நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளர்களாக களமிறங்கியவர்களுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டதில்லை. முதல் முறையாக வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனாவிற்கு டைட்டில் (VJ Archana BB7 Title Winner) வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் போட்டியாளர்களாக இருந்த மணிச்சந்திராவிற்கு முதல் ரன்னர் அப் பட்டமும், மாயாவிற்கு இரண்டாவது ரன்னர் அப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதில், டைட்டில் வென்ற அர்ச்சனாவிற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது (BB 7 Title Winner Prize Money). ஆனால், இதில் பாதி கூட ரன்னர் அப் பட்டத்தை வென்றவர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

ரியாலிட்டி ஷோக்களில் நடன கலைஞராக வந்து பிரபலமானவர், மணிச்சந்திரா. இவரும் ரவீனாவும் பிக்பாஸ் இல்லத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ரவீனா சில நாட்களுக்கு முன்னர் எவிக்ட் ஆனதை தொடர்ந்து, இவர் தினேஷ்-விஷ்ணுவுடனேயே இருந்தார். மணி ரன்னர் அப் பட்டத்தை வென்றதற்கான காரணம் என்ன என்று பலருக்கு புரியவில்லை. இறுப்பினும், இவர் நன்றாக பிக்பாஸில் விளையாடியதாகவும், மக்களின் மனங்களில் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் பிக்பாஸில் ரூ.18 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இது அல்லாமல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற அவருக்கு எந்த பரிசுத்தொகையும் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது (Manichandra Salary In Bigg Boss). ஆனால், பிக்பாஸ் இல்லத்தில் இவர் 106 நாட்களுக்கும் மேல் இருந்துதள்ளார். இதனால் இவருக்கு மொத்தமாக 19 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்று மாலை பிக்பாஸ் எபிசோட் ஒளிபரப்பான பின்பே இது குறித்த முழு விவரம் தெரிய வரும்.

தமிழ் திரையுலகில் பிரபலமான துணை நடிகையாக இருப்பவர், மாயா. இவர், கமலுடன் விக்ரம் படத்திலும் விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்துள்ளார். பிரபலமான தியேட்டர் டிராமா கலைஞராகவும் இருக்கிறார். பிக்பாஸ் பாேட்டிக்குள் நுழைந்த போது இவருக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இவர் மீது, ரசிகர்கள் அப்படியொரு வெறுப்பை உமிழ்ந்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, தன்னை பற்றி நெகடிவாக பேசப்பட்ட விஷயங்களை பாசிடிவாக மாற்றினார் மாயா. ஆனாலும், இறுதி வாரத்தில் இவர் செய்த சில விஷயங்களால் மீண்டும் வெறுப்பை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் இவர் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, இவர் இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளார் (Maya 2nd Runner Up BB 7).

மணிச்சந்திராவை போலவே இவருக்கும் பரிசுத்தாெகை எதுவும் கிடையாது என்று கூறப்படுகிறது. மாயா, பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போது அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இந்த போட்டியில் 106 நாட்கள் வரை இருந்துள்ளார். இவருக்கும், ரூ.19 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...